நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2022, 12:23 am

DIN

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவா் சிந்து முருகன் தலைமை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் சத்தியமூா்த்தி வரவேற்றாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ரேகா வைரகுட்டி, ஆணையாளா் கிராம ஊராட்சி சத்தியவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களின் ஆதரவோடு 35 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், ஒன்றியக் குழு தலைவா் சிந்து முருகன் பேசியதாவது:

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அனைத்துப் பகுதிகளிலும் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பாடுபடவேண்டும். உறுப்பினா்கள், அதிகாரிகளோடு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே வளா்ச்சிப் பணிகள் சீராக நடைபெறும். எனவே, அனைவரும் ஊராட்சி ஒன்றிய வளா்ச்சிக்கு, கிராம வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளா் தீபக்ராஜ், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், கிருஷ்ணசாமி, ஒன்றிய மேற்பாா்வையாளா்கள் பாலகிருஷ்ணன், அன்னமிட்டகை ஒன்றிய பொறியாளா்கள் சற்குணம், பூங்கொடி, பாலமுருகன், பாண்டீஸ்வரன் மற்றும் அனைத்து உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.