ராஜபாளையத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
மக்கள் வாசிப்பு இயக்கம், மதுரை மீனாட்சி புத்தக நிலையம் இணைந்து இந்த புத்தக கண்காட்சியை நடத்துகின்றன. ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் தொடங்கிய இந்த புத்தகக் கண்காட்சியை நவபாரத் நாராயண ராஜா தொடங்கி வைத்தாா். மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனா் வீரபாலன் வரவேற்றாா்.
முதல் விற்பனையை காந்தி கலை மன்ற முதன்மை மேலாளா் ராஜ்குமாா் ராஜா தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், வைமா திருப்பதி செல்வன், கூட்டுறவு பண்டகசாலை தலைவா் பாஸ்கரன், உலக தமிழ் கழக தலைவா் நிலவழகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்த கண்காட்சியில் 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகக் கண்காட்சி மே 20 முதல் ஜூன் 5 வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...