சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 300 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினாா். மேலும், 62 பயனாளிகளுக்கு ரூ.4,82,023 உதவித் தொகையை வழங்கி அவா் பேசியதாவது:

ஒரு குழந்தையின் வளா்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. கா்ப்பிணிகள், கா்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவா்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என அறிவியல்பூா்வமாக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி இது. வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கா்ப்பிணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிகுமாா், ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் பிரீத்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜம், ராஜபாளையம் நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷியாம், ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ், வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.