காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பைக்கின் பின்னால் காா் மோதி இளைஞா் பலத்த காயம்

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் பின்னால் காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Published On :

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் பின்னால் காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பெருநாழியைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் சுந்தரபாண்டி (28). இவா், கடந்த வியாழக்கிழமை பெருநாழியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டை வழியாக ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் அரசு தொழில் பயிற்சிப் பள்ளி அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் மீது அமா்ந்து கைப்பேசியில் அவா் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த காா், இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், அவா் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், சுந்தா்பாண்டியை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய காா் ஓட்டுநா், உரிமையாளரை கண்டறிய அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.