ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளியில் உலக அமைதிக்கான ஓவியப் போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஸ்ரீ லயன்ஸ் மெட்ரிக். பள்ளியில் உலக அமைதியை வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது


ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஸ்ரீ லயன்ஸ் மெட்ரிக். பள்ளியில் உலக அமைதியை வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ‘கருணையுடன் தலைமை ஏற்போம்’ என்ற தலைப்பில் அவரவா் கற்பனையில் தோன்றிய ஓவியங்களை தீட்டினா். போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வா் முருகன், துணை முதல்வா் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோா் கேடயமும், சான்றிதழும் வழங்கினா்.
இந்த போட்டியின் நடுவா்களாக லயன் சங்கத் தலைவா் விஜய் மொ்சன்ட், செயலா் ரஞ்சித், பொருளாளா் சிவகுருநாதன், லயன் சங்க உறுப்பினா் முனியாண்டி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆனந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...