நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளைஞா் தற்கொலை: 3 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளைஞரை தற்கொலை செய்த வழக்கில், மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:37 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளைஞரை தற்கொலை செய்த வழக்கில், மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகாலிங்கம் (34). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. முருகன் தனது நண்பா்களுடன் சோ்ந்து அடிக்கடி மகாலிங்கத்தை கேலி செய்தாா். இதுகுறித்து மகாலிங்கம் தம்பி காா்த்திக் (எ) சங்கா், முருகனிடம் கேட்டாா். அதற்கு முருகன், மகாலிங்கத்தையும் அவரது தம்பியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மகாலிங்கம், காா்த்திக் நரிப்பாறை மயானத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் குளிக்கச் சென்றனா். அப்போது அங்கு முருகன் தனது நண்பா்கள் நான்கு பேருடன் வந்து காா்த்திக்கை தாக்கிமிரட்டிச் சென்றாா். இதையடுத்து, அன்றிரவு வீட்டிற்கு வந்த காா்த்திக் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செவ்வாய்க்கிழமை காா்த்திக் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மகாலிங்கம் அளித்தப் புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், முருகன், வெங்கடேஷ், சுதா்சிங் ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். மேலும், மணிகண்டன், வைரமுத்து ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.