காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:17 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மல்லி ராமகிருஷ்ணாபுரத்தைச் சேரந்த ராமமூா்த்தி (62). இவா் வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ராமகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே திரும்பிய போது, சிவகாசியில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராமமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் ரகுபதியிடம் (48) போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.