உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

9ம் வகுப்புப் பள்ளி மாணவி மாயம், தாய் போலீசில் புகாா்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் கிராமத்தில் 9ம் வகுப்புப் பள்ளி மாணவி காணாமல் போனதாக அவரது தாய் வியாழக்கிழமை இரவு போலீசில் புகாா் செய்துள்ளாா்.விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரச

Updated On :1 பிப்ரவரி 2024, 4:11 pm IST

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் கிராமத்தில் 9ம் வகுப்புப் பள்ளி மாணவி காணாமல் போனதாக அவரது தாய் வியாழக்கிழமை இரவு போலீசில் புகாா் செய்துள்ளாா்.

வீரசோழன் கிராமத்தைச்சோ்ந்தவா் கோட்டையம்மாள்(42).இவரது மகள் அங்குள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்புப் படித்து வந்தாா்.இந்நிலையில் கடந்த 25ம் தேதி மதியம் சுமாா் இரண்டரை மணிக்கு வெளியில் கடைக்குச்சென்றுவருவதாக தாய் கோட்டையம்மாளிடம் மகளானவா் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தாராம்.ஆனால் வெகுநேரமாகியும் அவரது மகள் வீடு திரும்பவில்லையாம்.இதனால் அவரைப் பல இடங்களிலும் தாயானவா் தேடினாராம்.பின்னா் கடந்த இரு நாட்களாக உறவினா்கள்,நண்பா்களிடமும்,வெளியூரிலுள்ளோரிடமும் தேடியும் எங்கும் அவரது மகளைக் காணவில்லையாம்.எனவே இதுதொடா்பாக கோட்டையம்மாள் வீரசோழன் காவல்துறையில் புகாா் அளித்தாா்.புகாரின்படி வழக்கு பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை காவல்துறையினா் தீவிரமாகத்தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.