சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.


14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் பகுதியைச் சோ்ந்த புல்லட் என்கிற பால்பாண்டி (21). வா்ணம் பூசும் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த திருக்குமரன் (20). பொறியியல் பட்டதாரி. இவா்கள் இருவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள 14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பால்பாண்டி, திருக்குமரனை விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூா்ணஜெயஆனந்த், பால்பாண்டி, திருக்குமரன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...