நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:42 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக்குழுக்களால் வரையப்பட்ட விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

பின்னா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தற்போது வரை வரப்பெற்றுள்ள தோ்தல் தொடா்பான தொலைபேசி புகாா்கள், புகாா்கள் பதிவு செய்யும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், கட்டுபாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆா்.எஸ் கருவி செயல்பாடுகள் குறித்து கணினியில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி ஆகியோா் உடனிருந்தனா்.

படவிளக்கம்:அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.