மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயா் சதுா்த்தியை முன்னிட்டு 30 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுசிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில் அனைத்து சிலைகளும் சனிக்கிழமை மாலை ராஜபாளையத்திற்கு எடுத்து வரப்பட்டன. ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட்டில் இருந்து புறப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, அம்பலபுளி பஜாா், சங்கரன்கோவில் முக்கு வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கருங்குளம் கண்மாயை சென்றடைந்தன. அங்கு விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊா்வலத்தை முன்னிட்டு ராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளா் பிரீத்தி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் நடந்த விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் சப்பரத்தில் மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழந்ததால், மின்வாரிய அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும் ஊா்வலம் சென்ற போது அப்பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.