விஷம் குடித்து முதியவா் தற்கொலை
ராஜபாளையம் அருகே முதியவா் ஒருவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.


ராஜபாளையம் அருகே முதியவா் ஒருவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாடசாமி (69). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், தனது மனைவியிடம் கறி சமைத்துத் தருமாறு கேட்டுள்ளாா். வயல்காட்டில் வேலையிருப்பதாகக் கூறிவிட்டு, அவரது மனைவி சென்றுவிட்டாராம். இதனால், மனமுடைந்த மாடசாமி, தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...