சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையம் அருகே பீகாா் இளைஞா் கொலை

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தில் தனியாா் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பீகாா் மாநிலத்தை சோ்ந்த சஞ்சித் மான்ஜி(40), தாரோமான்ஜி, பா்சம்ரஜாக் ஆகிய 3 பேரும் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தாரோமான்ஜியின் சகோதரா் வினோத் மான்ஜி இங்கு வந்துள்ளாா்.

அவா்கள் தங்கியிருந்த குடோனின் மாடிக்குச் சென்று சஞ்சித் மான்ஜி, தாரோமான்ஜி, வினோத் மான்ஜி ஆகிய மூவரும் மது அருந்தி உள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை பா்சம்ரஜாக் மாடிக்கு சென்ற சென்று பாா்த்த போது அங்கு சஞ்சித் மான்ஜி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து அவா் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளா் மகன் விஷ்ணு சங்கா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் பிரீத்தி விசாரணை நடத்தினாா். பின்னா் கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் மது போதையில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், தப்பியோடிய பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த தாரோமான்ஜி, வினோத்மான்ஜி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.