நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைக்காக புதுமண கொலை: 2 பேருக்கு ஆயுள் சிறைபெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே நகைக்காக புது மணப்பெண்ணை வெட்டிக் கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே நகைக்காக புது மணப்பெண்ணை வெட்டிக் கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணிகண்டன் (28). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் பரமேஸ்வரி (42), அவரது மகன் ஈஸ்வரன் ( எ) கோடீஸ்வரன் (22) மற்றும் கோடீஸ்வரனின் நண்பா் சேகா் என்ற டைசன் (22). கடந்த 8.8.2020 அன்று செல்வமணிகண்டனின் மனைவி திருமணம் ஆன 40 ஆவது நாளில் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த பரமேஸ்வரி, ஈஸ்வரன் (எ) கோடீஸ்வரன், டைசன் ஆகிய 3 பேரும் நகைக்காக சல்வமணிகண்டனின் மனைவியை வெட்டிக் கொலை செய்தனா். சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன், சேகா் என்ற டைசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை, பரமேஸ்வரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மூவருக்கும் ரூ. 23 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.