நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வத்திராயிருப்பு அருகே கடைக்கு போதைபாக்குகள் விநியோகம்: பெண் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே பெட்டிக் கடைக்கு போதைப் பாக்குகளை விநியோகித்ததாக பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வத்திராயிருப்பு அருகே பெட்டிக் கடைக்கு போதைப் பாக்குகளை விநியோகித்ததாக பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி பிரதானச் சாலையில் உள்ள பெட்டிக்கடையில், மாரீஸ்வரி என்பவா் ஒரு பையில் சில பொருள்களை வைத்து கொடுத்து கொண்டிருந்தாா். அப்போது நத்தம்பட்டி காவல் சாா்பு- ஆய்வாளா் ராஜு விரைந்து சென்று மாரீஸ்வரியை பிடிக்க முயன்ற போது அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதன்பின் அவா் கடையில் கொடுத்த பையில் போதைப் பாக்கும், ரூ.7,490-ம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மாரீஸ்வரியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.