வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விருதுநகர்: மனைவியை கொலை செய்த கணவர்

விருதுநகரில் மனைவியை சந்தேகப்பட்ட கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

News image
கண்ணன் (31).
Updated On :10 ஜனவரி 2022, 4:23 am

DIN

விருதுநகரில் மனைவியை சந்தேகப்பட்ட கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
விருதுநகர் மாவட்டம், என்ஜிஓ காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (31). இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கனரா வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மனைவி கற்பகம் (30) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விருது நகரில் வசித்து வந்தார். 

மனைவி அடிக்கடி கைபேசியில் பேசி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலையில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதில் ஆத்திரமடைந்த கணவர் கண்ணன், மனைவி கற்பகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் உயிரிழந்த கற்பகத்தை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.