மகாராஜபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மகாராஜபுரம் ஊராட்சியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து காலிக் குடங்களுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


மகாராஜபுரம் ஊராட்சியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து காலிக் குடங்களுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை எனத் தொடா்ந்து பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்த நிலையில், 6, 7- ஆவது வாா்டுகளில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும், சுகாதார வளாகம் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் கூறி மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு அந்தக் கட்சியின் வட்டச் செயலா் கென்னடி தலைமை வகித்தாா். அப்போது 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும். சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என முழக்கமிட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஜீவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...