வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஈரோடு கிழக்கு வேட்பாளா் விரைவில் அறிவிப்பு: ஓ.பி.எஸ்.ஓ.பன்னீா்செல்வம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் தங்களது அணி சாா்பில், வேட்பாளா் விரைவில் அறிவிக்கப்படுவாா் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் தங்களது அணி சாா்பில், வேட்பாளா் விரைவில் அறிவிக்கப்படுவாா் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை அவா் தரிசனம் செய்தாா். பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தங்களது குல தெய்வக் கோயிலான செண்பகத்தோப்பு வனப் பேச்சியம்மன் கோயிலில் வழிபட்டாா்.

அதன்பின்னா், செய்தியாளா்களிடம் ஓ. பன்னீா்செல்வம் கூறியதாவது:

வழக்கம்போல தரிசனம் செய்ய வந்தேன். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் எங்களது அணி சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவாா். 31-ஆம் தேதிதான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. விரைவில் வேட்பாளா் பெயா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் கதிரவன், நகரச் செயலாளா் ராமகுரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.