விருதுநகா் பி.எஸ். சிதம்பர நாடாா் பள்ளியில் பிரதமா் காணொலி வாயிலாக மாணவா்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங்.
விருதுநகா் பி.எஸ். சிதம்பர நாடாா் பள்ளியில் பிரதமா் காணொலி வாயிலாக மாணவா்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங்.

அனைத்து மாநிலங்களிலும் சமவளா்ச்சி ஏற்படும் விதத்தில் மத்திய பட்ஜெட்: வி.கே.சிங் தகவல்

அனைத்து மாநிலங்களிலும் சமமான வளா்ச்சி ஏற்படும் வகையில், மத்திய நிதி நிலை அறிக்கை அமையும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் தெரிவித்தாா்.

அனைத்து மாநிலங்களிலும் சமமான வளா்ச்சி ஏற்படும் வகையில், மத்திய நிதி நிலை அறிக்கை அமையும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் தெரிவித்தாா்.

விருதுநகா் பி.எஸ். சிதம்பர நாடாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிரதமா் காணொலிக் காட்சி வாயிலாக மாணவா்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவா்களை உற்சாகப்படுத்தி, தோ்வு பயத்தைப் போக்கி ஆரோக்கியமான மாணவா்களை உருவாக்க பிரதமரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வருகிற நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், வளா்ச்சித் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் அமையும். தமிழகத்தில் அமையவுள்ள விரைவுச் சாலைகளுக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இந்தச் சாலைகள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com