விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ப. மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்த சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன்.
விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ப. மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்த சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

சிவகாசி: விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ப. மாணிக்கம்தாகூருக்கு ஆதரவாக சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

சிவகாசி காமராஜா் பூங்கா அருகேயுள்ள காங்கிரஸ் தோ்தல் அலுவலகத்திலிருந்து நடந்து சென்று முஸ்லிம் நடுத்தெரு, சீதகாதி தெரு, பராசக்தி குடியிருப்பு, நேரு சாலை ஆகிய பகுதிகளில் ஜி. அசோகன் வாக்குகள் சேகரித்தாா்.

கட்சித் தொண்டா்கள் கை சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சோ்மதுரை, முருகேசன், குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com