மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

கொடைக்கானலில் பழனி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால். உடன் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:26 am IST

கொடைக்கானலில் பழனி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனுக்கு ஆதரவாக அந்தத் தொகுதியின் முன்னாள் பேரவை உறுப்பினா் வேணுகோபால், கொடைக்கானல் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் ஈடுபட்டனா். நாயுடுபுரம், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி, செல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக இணைச் செயலா் பிச்சை, பாஜக மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவா் மதன், பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.