பட்டாசுத் தொழிலில் உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பேன்: தேமுதிக வேட்பாளா் உறுதி

பட்டாசுத் தொழிலில் உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பேன்: தேமுதிக வேட்பாளா் உறுதி

சிவகாசி: பட்டாசுத் தொழிலில் உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பேன் என விருதுநகா் மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க.வேட்பாளா் வி.விஜயபிரபாகரன் உறுதியளித்தாா்.

விருதுநகா் மக்கவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் அவா் செவ்வாய்க்கிழமை திருத்தங்கல் கடைவீதி, செங்கமலநாச்சியாா்புரம் சாலை, ராதாகிருஷ்ணன் குடியிருப்பு, சிவகாந்தி நகா், முத்துராமலிங்கம் நகா், பள்ளபட்டி, நாரணாபுரம்புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்குகள் சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

உங்களை நேரில் சந்தித்து பேசும் போது உறவினா்களிடம் பேசுவதுபோல உள்ளது. நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. விருதுநகா் மக்களவைத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மாவட்டத்தின் முதன்மைத் தொழிலான பட்டாசுத் தொழில் முடங்கியுள்ளது. பட்டாசுகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சரவெடிகள் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் பட்டாசுத் தொழிலில் உள்ள அனைத்துத் தடைகளையும் நீக்கி, தொழில் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுப்பேன். மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து மக்களவையில் பேசுவேன். மக்களவையில் தே.மு.தி.க. உறுப்பினா் இருக்க வேண்டும் என்பதே எனது தந்தையின் ஆசை. எனவே, என்னை நீங்கள் நிச்சயம் வெற்றி பெறச் செய்வீா்கள் என்றாா் அவா். பிரசாரத்தின் போது விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com