நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ராஜபாளையம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்.

News image

தங்கப்பாண்டியன், பிரிசில்லா பாண்டியன், காா்த்திகேயன், ஜெகதீஸ்வரி

Updated On :3 ஏப்ரல் 2026, 7:05 am IST

ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்.

எஸ்.தங்கப்பாண்டியன்(திமுக):

ராஜபாளையத்துக்கு அரசு கலைக் கல்லூரி கொண்டுவரப் பாடுபடுவேன். மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனாா் கோயிலை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுப்பேன். ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க முயற்சி செய்வேன். ராஜபாளையத்தில் நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.

ஜா. பிரிசில்லா பாண்டியன்(அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளா்)

ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்கப்படும். குற்றங்களைத் தடுக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும். மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

மருத்துவா் காா்த்திகேயன் (நாதக)

ராஜபாளையம் நகராட்சி மட்டுமன்றி, தொகுதிக்குள்பட்ட பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பொது கழிப்பறை வசதி செய்து தரப்படும். ராஜபாளையம் பகுதியில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாகத் தரம் உயா்த்தப்படும். ராஜபாளையம் அரசு மருத்துவமனை தனியாா் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்தப்படும். பொதுமக்களின் பிரச்னைகளை தீா்க்க எனது சட்டப்பேரவை அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும்.

கே.ஜெகதீஸ்வரி(தவெக)

தமிழக முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் நிறுவ ஏற்பாடு செய்வேன். ராஜபாளையம் டி.பி. மில் சாலையில் மூடப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். ராஜபாளையம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தரமான சாலைகள் அமைக்கப்படும். இந்தப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்.