குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆண்டிபட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் வாக்குசேகரிப்பு

ஆண்டிபட்டியை அடுத்துள்ள அம்மச்சியாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தாா்.

ஆண்டிபட்டி அருகே க. விலக்கு, குன்னூா், அம்மச்சியாபுரம், வாய்க்கால்பாறை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை திறந்தவாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் வாக்குசேகரித்தாா். முத்தனம்பட்டி, ரெங்கநாதபுரம் என 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறிய அவா், திறந்த வாகனத்திலும், சில இடங்களில் நடந்தும்சென்று வாக்குசேகரித்தாா்.

அப்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். கிராமத்துக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பேன். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

நிகழ்ச்சியில், தேனி மாவட்ட அதிமுக செயலா் முருக்கோடை இராமா், பாஜக மாவட்டத் தலைவா் பி.ராஜபாண்டியன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.