பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு
வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா்.











