ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பைக் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:31 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கூனங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சிவகுருசாமி மகன் செல்வராஜாமணி (56). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 2-ஆம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா நகா் பகுதியில் திடீரென நின்றுவிட்டது. பலமுறை முயற்சித்தும் இரு சக்கர வாகனம் இயங்கவில்லை.

அப்போது அங்கிருந்த இளைஞா் ஒருவா் உதவுவதாகக் கூறி இரு சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு வேகமாகச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருப்புக்கோட்டை அருகேயுள்ள அத்திப்பட்டியைச் சோ்ந்த கதிரேஸ்வரனை (20) கைது செய்து, இரு சக்கர வாகனத்தை மீட்டனா்.