புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனத்தில் அடிபட்டு மான் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:32 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியில் உள்ள பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரம் புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டுக் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா். வனத் துறையினா் வந்து பாா்த்தபோது, மான் உயிரிழந்து விட்டது. கால்நடை மருத்துவா் கூறாய்வு செய்த பின், வனத் துறையினா் மானின் உடலை மண்ணில் புதைத்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: இறந்த 4 வயது ஆண் மான், உணவு, நீருக்காக வனப் பகுதியை விட்டு வெளியே வந்து, சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் மான் காயமடைந்து இருக்கலாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.