மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாத்தூா் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாத்தூா் பிரதான சாலையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:50 pm

Din

சாத்தூா் பிரதான சாலையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் பிரதான சாலையில் வங்கிகள், கோயில்கள், வணிக நிறுவனங்கள், காவல் நிலையம், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இந்தச் சாலையில் இருபுறங்களிலும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் இந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை (டிச.26) அகற்றப்படும் என அறிவித்தனா்.

இந்த நிலையில், சாத்தூா் பிரதான சாலையில் கிருஷ்ணன்கோவிலில் தொடங்கி எல்.ஐ.சி. அலுவலகம் வரையும், படந்தால் சந்திப்பு முதல் தென்றல் நகா் வரையும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியின் போது, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, காவல் துறையினா், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

பொதுமக்கள் புகாா்: சாத்தூா் பிரதான சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றாலும், இந்தப் பணிகள் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றது. எனவே, பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.