எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:37 pm

தூத்துக்குடி மாநகராட்சி, எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இச்சாலை, எட்டயபுரம் சாலை-தனியாா் அகாதெமி வடபுறம் மீனாட்சிபுரம் கண் மருத்துவமனை வழியாக ஜெயராஜ் சாலை வரை செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், 3ஆம் கேட் மேம்பாலம் கீழ், தனியாா் மருத்துவமனை அருகே பாழடைந்த கட்டடம் ஒன்றும் தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையும் மேயா்ஆய்வு செய்தாா். அங்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

ஆய்வின்போது, திமுக வட்டச் செயலா்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.