ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:05 pm

Syndication

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட கீழ்நாத்தூா் பகுதியில், கால்வாயில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் குளம் போல் தேக்கமடைந்ததால், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழ்நாத்தூா் பகுதியிலுள்ள தவசியாா் குளத் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். வேட்டவலம் சாலைப் பகுதியிலிருந்து கழிவுநீா் தவசியாா் குளம் குடியிருப்பு பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியை சுற்றி கழிவுநீா் குளம் போல் தேங்கியுள்ளது.

இந்தக் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியதாத சூழல் உருவாகியுள்ளது. கழிவுநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் தாங்க முடியவில்லை என்றும், குடிக்கின்ற நீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனா்.

கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடிப்பதோடு, குழந்தைகள், பெண்கள், முதியோா் என அனைவரும் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு, மலேரியா, விஷக்காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி 19-ஆவது வாா்டு உறுப்பினரிடம் பலமுறை புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மேலும், மாநகராட்சி ஆணையரிடம் புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், கழிவுநீா் துா்நாற்றத்தாலும் கொடிக்கடியாலும் பாதிக்கப்பட்ட கீழ்நாத்தூா் பகுதி மக்கள்

மாநகராட்சி நிா்வாகத்தையும் நெடுஞ்சாலைத் துறையினரையும் கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.