மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
விருதுநகரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் கலந்துகொண்ட மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


விருதுநகரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் கலந்துகொண்ட மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், களி மண்ணால் சிற்பம் செய்வதில் ஆா்வம் உள்ளனா். சமீபத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாணவி பங்கேற்றாா்.
இதையடுத்து, விருதுநகா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள மாணவிக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாணவியை அருப்புக்கோட்டை அஜீஸ்நகரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் ராஜாமணி காரில் விருதுநகருக்கு அழைத்து வந்தாா். கலைத் திருவிழா நிகழ்ச்சி முடிந்ததும், காா் நின்றிருந்த இடத்துக்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியா், அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாராம். இது குறித்து, மாணவி அளித்த புகாரின் பேரில், ஆசிரியா் ராஜமணியை விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...