ஆண்டாள் கோவில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா நாளை தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா நாளை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா நாளை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
நிகழாண்டில், புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, புதன்கிழமை காலை பெரிய பெருமாள் சந்நிதியில் தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் வைபவம் நடைபெற்றது. பிரம்மோத்ஸவ விழாவில், தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா்.
இதில் 5-ம் நாள் விழாவான அக்.8-ம் தேதி கருட சேவையும், 9-ம் தேதி ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாளான 12-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.
நவராத்திரி விழாவையொட்டி, இன்று (வியழாக்கிழமை) முதல் 9 நாள்கள் ஆண்டாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி தினசரி பல்வேறு அலங்காரங்களில் கொலு வீற்றிருப்பாா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...