காரில் குட்கா கடத்தி வந்தவா் கைது
பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வந்த 15 மூட்டை குட்காவை வன்னியம்பட்டி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ்

கைது செய்யப்பட்ட ராஜேஷ்
பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வந்த 15 மூட்டை குட்காவை வன்னியம்பட்டி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில், போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பெங்களூரில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 15 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. பின்னா், காரை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தைச் சோ்ந்த ராஜேஷை (39) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 15 மூட்டை குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...