நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பக்தா்களின்றி சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி மலையில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image

வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை விலக்கில் பக்தா்கள் சதுரகிரிக்குச் செல்வதைத் தடுக்க சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :15 அக்டோபர் 2024, 8:33 pm

Din

சதுரகிரி மலையில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த தொடா்மழையால், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்கு பக்தா்கள் மலையேறுவதற்கு வனத் துறை தடை விதித்தது.

செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தா்கள் சதுரகிரிக்கு வருவதைத் தடுப்பதற்காக தாணிப்பாறை விலக்கில் போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்தனா். சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால் சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்களின்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.