ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுப்பன்குளம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு: அமைச்சா் தங்கம்தென்னரசு திறந்து வைத்தாா்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக நிதியமைச்சா் தங்கம்தென்னரசு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட புதிய வீடுகளை வியாழக்கிழமை திறந்து வைத்து பயனாளிகளிடம் சாவியை வழங்கிய தமிழக நிதியமைச்சா் தங்கம்தென்னரசு.

Updated On :17 அக்டோபர் 2024, 11:55 pm

Din

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக நிதியமைச்சா் தங்கம்தென்னரசு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.1.35 கோடியில் 6 தொகுப்புகளைக் கொண்ட 24 வீடுகளையும், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூா் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் ரூ.44.88 லட்சத்தில் இரு தொகுப்புகளாக கட்டப்பட்ட 8 வீடுகளையும் நிதியமைச்சா் தங்கம்தென்னரசு திறந்து வைத்து பயனாளிகளிடம் வீட்டின் சாவியை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் 8 இடங்களில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாம்களில் 850 வீடுகள் கட்டப்பட்டன. இதில் பல்வேறு கட்டங்களாக 200 பயனாளிகளிடம் வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 650 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி முடிந்ததும் பயனாளிகளிடம் சாவி ஒப்படைக்கப்படும் என்றா் அவா்.

நிகழ்வில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், விருதுநகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன், சாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ரகுராமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி வி. முத்துலட்சுமி, துணைத் தலைவா் வ. விவேகன்ராஜ், சிவகாசி வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.