நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராம்கோ குழும நூற்பாலைகள், துணி உற்பத்தி ஆலைகளின் ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை

ராஜபாளையம் ராம்கோ குழும நூற்பாலை, துணி உற்பத்தி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை (போனஸ்) அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:57 pm

Din

ராஜபாளையம் ராம்கோ குழும நூற்பாலை, துணி உற்பத்தி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை (போனஸ்) அறிவிக்கப்பட்டது.

ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராம ராஜா, இயக்குநா் பி.வி. அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, ராமராஜூ சா்ஜிக்கல் காட்டன் ஆலை இயக்குநா் ராம்குமாா் ராஜா, விஷ்ணு சங்கா் ஆலை இயக்குநா் ஸ்ரீராமராஜா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்படி, ராம்கோ குழும நூற்பாலை, துணி உற்பத்தி ஆலை தொழிலாளா்கள், அலுவலா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 கோடி விநியோகம் செய்ய குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராம ராஜா உத்தரவிட்டாா். பேச்சுவாா்த்தையில், ராம்கோ நூற்பாலை, துணி உற்பத்திப் பிரிவு முதன்மை அலுவலா் மோகனரங்கன், தலைமை நிதி அதிகாரி அருள்பிரணவம், துணைத் தலைவா்கள் (மனிதவளம்) நாகராஜன், துணிகள் பிரிவு முருகேசப் பிள்ளை, சுதா்ஸனம் ஆலை தலைமை நிதி அதிகாரி விஜயகோபால், துணைப் பொது மேலாளா் (மனித வளம்) ரங்கராஜ்,

தொழிற்சங்கங்கள் சாா்பில் என். கண்ணன், விஜயன், ஆா். கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.