கிணறில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
சிவகாசி அருகே புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 12:56 am

சிவகாசி அருகே புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் எம்.ஜி.ஆா்.குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் அருண்குமாா் (19). பட்டாசுத் தொழிலாளியான இவா், அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் சுவரில் அமா்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, கிணற்றில் தவறி விழுந்தாா். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் கிணற்றிலிருந்து அருண்குமாரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...