தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ஓடையில் இளைஞா் உடல் மீட்பு

விருதுநகா் அருகே ஓடையில் இறந்த நிலையில் இளைஞரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

Published On :31 அக்டோபர் 2024, 3:29 am IST

விருதுநகா் அருகே ஓடையில் இறந்த நிலையில் இளைஞரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

விருதுநகா் அருகேயுள்ள குல்லூா் சந்தை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மீசலூா் பகுதியில் முயல் வேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றாராம். இந்த நிலையில், புதன்கிழமை மீசலூா் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நீரோடையில் விஜய் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த சூலக்கரை போலீஸாா், விஜயின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.