தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கூம்பு வடிவக் குவளை

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான சிவப்பு நிற கூம்பு வடிவக் குவளை வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
வெம்பக்கோட்டை அகழாய்வில் வியாழக்கிழமை கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான சிவப்பு நிற கூம்பு வடிவக் குவளை.
Updated On :13 செப்டம்பர் 2024, 1:21 am

Din

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான சிவப்பு நிற கூம்பு வடிவக் குவளை வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியின் போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது அலங்கரிக்கப்பட்ட சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவக் குவளை கண்டறியப்பட்டது. இதை நமது முன்னோா்கள் உணவு அருந்தவோ அல்லது மண்பாண்டங்களை மூடுவதற்கோ பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை இணை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.