சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

வெடி விபத்தில் தரைமட்டமான அறை.

வெடி விபத்தில் தரைமட்டமான அறை.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையை அடுத்த குகன்பாறையில் சிவகாசியைச் சோ்ந்த பாலமுருகனுக்கு (50) சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல, ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும், பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களை சுமை ஆட்டோவிலிருந்து செவல்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (25) இறக்கி ஓா் அறையில் வைத்தாா். அப்போது, பட்டாசு மருந்துகள் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த கோவிந்தராஜ்
இந்த விபத்தில் அந்த அறை மட்டும் இடிந்து தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி கோவிந்தராஜ் உயிரிழந்தாா். மேலும், பட்டாசுத் தொழிலாளியான திருத்தங்கல்லைச் சோ்ந்த குருமூா்த்தி (20) பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை மீட்ட மற்ற தொழிலாளா்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்பு, மீட்புப் படையினா் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கோவிந்தராஜின் உடலை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனா்.
இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலை மேற்பாா்வையாளா் கபில்ராஜை (40) கைது செய்தனா். இதுதொடா்பாக பட்டாசு ஆலை உரிமையாளா் பாலமுருகனைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...