தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீக்குச்சி கட்டுகள் எரிந்து நாசமாகின.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:40 pm

Syndication

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீக்குச்சி கட்டுகள் எரிந்து நாசமாகின.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மேலகாந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (38). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு வெள்ளிக்கிழமை தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட திடீா் உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சாத்தூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் தீக்குச்சி பண்டல்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.