விருதுநகர்
போக்சோ வழக்கில் இளைஞா் கைது
போக்சோ வழக்கில் சென்னை பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போக்சோ வழக்கில் சென்னை பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பழையனூா் பகுதியைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா் (35). திருமணமாகாத இவருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் வேலையில் சோ்த்து விடுவதாகக் கூறி, சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளாா். அங்கு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தி உள்ளாா். அவரிடமிருந்து தப்பித்து கடந்த மாதம் 5-ஆம் தேதி சிறுமி ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, நரேஷ்குமாரை சென்னையில் கைது செய்தனா்.