ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாம்
சிவகாசி மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து, மாநகராட்சிக்குள்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை நடத்தியது.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:43 am

சிவகாசி மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து, மாநகராட்சிக்குள்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை நடத்தியது.
இந்த முகாமை மேயா் இ.சங்கீதா தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மாநகராட்சி 1-ஆவது வாா்டு முதல் 24-ஆவது வாா்டு வரை வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கு தடுப்பூசியை, கால்நடை மருத்துவா்கள் பழனிச்சாமி, துரைமாஸ்கோமலா் ஆகியோா் செலுத்தினா்.
இதில் மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி, நகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா்கள் சுரேஷ், சத்தியராஜ், திருப்பதி, மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...