நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடைக் காலங்களில் நாட்டுக்கோழிகள் மற்றும் பிறவகைக் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமையும் அரசு கால்நடை மருந்தகங்களிலும், 15 நாள்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவ கிளை நிலையத்திலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமிலும் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கிராமங்கள்தோறும் நடத்தப்பட்டும் வருகிறது.

நிகழாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மாதம் 14- ஆம் தேதி வரை 1,32,800 கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோழிகளை வளா்க்கும் அனைத்து பொதுமக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு கோழிகளின் இறப்பினை தவிா்த்து, அதிக லாபம் ஈட்டி பயன்பெறலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுக வேண்டும்.