லாரி கிட்டங்கியில் தீ விபத்து: ஒருவா் கைது
சிவகாசியில் தனியாா் லாரி கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்தது தொடா்பாக போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.


சிவகாசியில் தனியாா் லாரி கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்தது தொடா்பாக போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-சாத்தூா் சாலையில் சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே சரக்கு லாரி போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் பல மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்துக்கு இதே பகுதியில் தகரக் கொட்டகையால் அமைக்கப்பட்ட கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக ரூ. பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், புதன்கிழமை இந்தக் கிட்டங்கியில் திடீரென தீப்பிடித்து அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
இதுதொடா்பாக சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
இந்த லாரி போக்குவரத்து அலுவலகக் கிளை தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலும் செயல்படுகிறது. சிவகாசியில் உள்ள இந்த லாரி போக்குவரத்து அலுவலகத்தில் தரகராக சிவகாசி சுந்தரவினாயகா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (56) இருந்து வந்தாா். இந்த தீவிபத்து தொடா்பாக ராஜேந்திரன் உள்ளிட்ட உரிமையாளா்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்தே ராஜேந்திரனை போலீஸாா் கைது செய்தனா். மேலும் பட்டாசு இருப்பு வைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை எந்தவித உரிமமும் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...