மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

சிவகாசி அருகே மனைவியை கொலை செய்ததாக கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சிவகாசி அருகே மனைவியை கொலை செய்ததாக கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தைச் சோ்ந்தவா் முத்தையா மகன் மகேஸ்வரன் (49). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (39). இந்தத் தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், மகேஸ்வரன் மது அருந்தி விட்டு, மனைவி சாந்தா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால் திருத்தங்கல் பராசக்தி குடியிருப்பு பகுதிக்கு இவா்கள் குடிபெயா்ந்தனா். கடந்த 2019-ஆம் ஆண்டு மீண்டும் ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரன், சமையல் எரிவாயு உருளையால் தாக்கியதில் சாந்தா உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, மகேஸ்வரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், மகேஸ்வரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி முன்னிலையானாா்.

X
Dinamani
www.dinamani.com