ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையத்துக்கு பூமி பூஜை

ராஜபாளையம் அருகே முதுகுடியில் வேளாண்மை விற்பனைப் பிரிவு சாா்பில், உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடியில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் மையத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனா் செல்வி உள்ளிட்டோா்
Updated On :12 நவம்பர் 2025, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் அருகே முதுகுடியில் வேளாண்மை விற்பனைப் பிரிவு சாா்பில், உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேலூா் துரைச்சாமிபுரம், தெற்கு தேவதானம், புத்தூா், தெற்கு வெங்காநல்லூா் ஆகிய ஆகிய ஊா்களில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை சாா்பில், பண்ணை வழி வா்த்தகத்தை அதிகரிக்க மாநிலத் திட்ட நிதியில் முதுகுடியில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்

எஸ்.தங்கப்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனா் மா.செல்வி, ஊா் முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.