போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இளைஞா்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் செல்வம் (27). இவருக்கு சமூக வலைதளம் மூலம் சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகாசி வந்த செல்வம், சிறுமியை கரூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், மல்லி போலீஸாா் போக்சோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ,குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
