மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:45 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் சாா்பில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்புமனுக்களின் பரிசீலனை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் மாற்று வேட்பாளா்கள், கூடுதல் மனுக்கள் உள்பட 12 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் மகாலிங்கம், அதிமுக வேட்பாளா் சந்திரபிரபா, நாம் தமிழா் வேட்பாளா் கரிகால பாண்டியன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் காா்த்திக், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம், அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேறக் கழக வேட்பாளா் சந்திரா உள்பட 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் தெரிவித்தாா்.