விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ் தலைமையில் தெற்கு நகரச் செயலா் பரமசிவம், வடக்கு நகரச் செயலா் முருகேசன், ராஜபாளையம் பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லிங்கம் தலைமையில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் நகரச் செயலா் பி.கே.விஜயன், வழக்குரைஞா் பகத்சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ராஜபாளையத்தை அடுத்த முகவூரில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா் பரமேஸ்வரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ராஜபாளையத்தை அடுத்த சேத்தூா் காமராஜா் நகரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வழக்குரைஞா் பகத்சிங் தலைமையில், அம்பேத்கரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



